
கோலாலம்பூர், பிப் 26 – மீண்டும் மலர்ந்துள்ளது உப்சி பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நாடகச் சுடர் 2025 போட்டி.
எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த போட்டி கோவிட் தொற்று காரணமாக சில ஆண்டுகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் இவ்வாண்டு மே மாதம் 3ஆம் தேதி உப்சி பல்கலைக்கழத்தின் Panggung Percubaan, Kampus Sultan Azlan Shahவில் காலை 9 மணி முதல் மாலை மணி 6 வரை நாடாகப் போட்டி நடைபெறவிருக்கிறது.
இப்போட்டியில் அனைத்து பொது பல்கலைக்கழகங்கள் , தனியார் உயர்க்கல்வி நிலையங்கள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மற்றும் தொழிற் கல்லூரிகள் ( IPTA, IPTS, IPG, POLITEKNIK ) ஆகியவற்றின் நாடாகக் குழுக்கள் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.
தேசிய நிலையில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் கலந்துகொள்ளும் 10 குழுக்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
இப்போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறும் குழுவுக்கு சுழல் கிண்ணத்தோடு 2,000 ரிங்கிட் தொகையும், இரண்டாவது இடத்தை பெறும் குழுவுக்கு வெற்றிக் கிண்ணமும் , 1,500 ரிங்கிட்டும் மற்றும் மூன்றாவது இடத்தை பெறும் குழுவுக்கு வெற்றிக் கிண்ணமும் 1,000 ரிங்கிட்டும் பரிசாக வழங்கப்படும்.
அதோடு இப்போட்டியில் சிறந்த கதை மற்றும் சிறந்த நடிகர் விருதும் வழங்கப்படவுள்ளது.
ஆர்வமுள்ள மாணவர்கள் சமூகவியல் திருக்குறளை மையமாகக் கொண்ட நாடகங்களை படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இப்போட்டிக்கான பதிவு மார்ச் 20ஆம் தேதிவரை திறக்கப்பட்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு திரையில் காணும் எண்களுக்கு தொடர்புகொள்ளலாம்.