கோலாலம்பூர், நவம்பர்-12 – ஆறாமாண்டு மாணவர்களுக்கான UPSR தேர்வும், மூன்றாம் படிவ மாணவர்களுக்கான PT3 மதிப்பீடும் மீண்டும் கொண்டு வரப்படாது!
அவ்விரு தேர்வுகளும் அகற்றப்பட்டது அகற்றப்பட்டது தான் என, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
UPSR-யையும் PT3-யையும் மீண்டும் கொண்டு வர வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தாலும், அமைச்சு அம்முடிவில் உறுதியாக உள்ளது.
நினைத்தால் தேர்வுகளைக் கொண்டு வருவதும், நினைத்தால் அகற்றுவதுமாக இருந்தால், கல்வியில் நாம் ஒன்றும் சாதிக்க முடியாது.
மேற்கண்ட இரு தேர்வுகள் அகற்றப்பட்டு விட்டாலும், PBS எனப்படும் பள்ளிக் கல்வி சார் மதிப்பீடுகளை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும் என மக்களவையில் பேசிய போது அவர் சொன்னார்
UPSR தேர்வும் PT3 தேர்வும் முறையே 2021-ஆம் ஆண்டும் 2022-ஆம் ஆண்டும் அகற்றப்பட்டன.