
கோலாலம்பூர், நவம்பர் 21 – பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உள்ளூர் உரிம வாணிப நிறுவனமான ‘US Pizza’, ‘Kita Pizza’ என பெயர் மாற்றம் காணவுள்ளது.
தற்சமயம் ‘US Pizza’ என அறியப்படும் அந்த நிறுவனம், பெயர் மாற்றப் பரிந்துரை தொடர்பில் தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவிற்கு பத்தாயிரம் “லைக்குகள்” கிடைக்கும் பட்சத்தில், ‘US Pizza’ எனும் அந்நிறுவனத்தின் பெயர் ‘Kita Pizza’ என பெயர் மாற்றம் காணுமென அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவிற்கு இதுவரை ஈராயிரத்து 600 லைக்குகள் கிடைத்துள்ள வேளை ; 618 கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.
அதில் பலர், ‘MY Pizza’ என பெயரிடப்படுவதே சிறந்த மாற்றமாக இருக்குமென குறிப்பிட்டுள்ளனர்.