![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/12/MixCollage-14-Dec-2024-09-06-AM-4784.jpg)
சுபாங், டிசம்பர்-14, USJ அருகே LDP நெடுஞ்சாலையின் 2.8-வது கிலோ மீட்டரில் 4 வாகனங்களை உட்படுத்திய விபத்தில், கொள்கலன் லாரியில் அரைபட்டு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
வியாழக்கிழமை இரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்த விபத்தில், 40 வயது அந்நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
USJ-விலிருந்து பூச்சோங் பாராட் டோல் சாவடியை நோக்கி நடுப்பாதையில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, இடப்புறமிருந்த இரு வாகனங்களுடன் உராசியது.
உரசலில் சாலையில் விழுந்தவர், லாரியில் அரைப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சடலம் சவப்பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளுடன் உரசிய Perodua Bezza காரின் உரிமையாளர் விசாரணைக்கு வந்துதவுமாறு, சுபாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) கேட்டுக் கொண்டுள்ளார்.