Latestஉலகம்

Venice கால்வாய் ஒளிரும் பச்சை நிறமாக மாறியதன் பின்னணி என்ன? ; அதிகாரிகள் விசாரணை

இத்தாலியிலுள்ள, பிரபல வெனிஸ் காய்வாய் (Venice Canal), ஒளிரும் பச்சை நிறமாக மாறிய சம்பவம் தொடர்பில், அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு நேரப்படி, நேற்று காலை மணி ஒன்பது வாக்கில், அந்த கால்வாயிலுள்ள பாலத்திற்கு அடியில், திடீரென தோன்றிய பச்சை திரவம் பின்னர் இதர பகுதிகளுக்கு பரவியதாக, அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து, போலீசாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது.

கால்வாய் நீர் பரிசோதனைக்கு அனுபப்பட்டுள்ள வேளை ; அப்பகுதியிலுள்ள CCTV கண்காணிப்பு காமிரா பதிவுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

அதே சமயம், சந்தேகிக்கும் வகையில் எதையாவது கண்டார்களா என, படகோட்டிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வேளையில், இது ‘ஆல்காவாக’ இருக்கலாம் எனவும், கால்வாயில் சட்டவிரோதமாக இரசாயனம் ஊற்றப்பட்டிருக்கலாம் எனவும் இணையவாசிகள் பல்வேறு ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர்.

சுற்றுப் பயணிகளிடையே பிரபலமான வெனிஸ் காய்வாய் நிறம் மாறுவது இது முதல் முறையல்ல.

1968-ஆம் ஆண்டு, சுற்று சூழல் பிரச்சனைகள் குறித்தும், இயற்கைக்கும் வளர்ந்து வரும் நாகரீகத்திற்கும் இடையிலான உறவு குறித்தும் விழிபுணர்வை ஏற்படுத்தும் வகையில், அர்ஜெண்டினா கலைஞர் Nicolas Garcia Uriburu என்பவர், Fluorescein எனப்படும் ஒளிரும் சாயத்தை கொண்டு வெனிஸ் கால்வாய் நிறத்தை மாறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!