வாஷிங்டன், பிப் 16 – கடந்தாண்டு அதன் தோற்றுநர் ரிச்சர்ட் பிரான்சனை ( Richard Branson ) ஏற்றிக் கொண்டு விண்வெளிக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட விர்ஜன் கேலக்டிக் , மீண்டும் அதன் டிக்கெட் விற்பனையை பொது மக்கள் அனைவருக்கும் திறந்துள்ளது.
இதற்கு முன்பு, முன் தொகை செலுத்தி, வரிசைப்படி பட்டயலில் காத்திருப்பவர்களுக்கு மட்டுமே அந்நிறுவனத்தின் விண்கலத்தில் பயணிப்பதற்கான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது அனைவரும் அந்த டிக்கெட்டை வாங்க முடியும் நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை 4 லட்சத்து 50,000 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. இவ்வாண்டு இறுதியில் விர்ஜன் கேலக்டிக், ஆயிரம் பேரை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.