
சிலாங்கூர், குவாலா சிலாங்கூர் – கோலாலம்பூர் சாலையை, சொந்த வாகனப் பந்தய தளம் போல பயன்படுத்தி, அபாயகர சாலை சாகசங்கள் தொடர்பான காணொளிகளை பதிவுச் செய்து வந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
20 வயது மதிக்கத்தக்க அவ்விருவர் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று, ட்விட்டரில் வைரலானதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக, குவாலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ரம்லி காஸா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை, காலை மணி 8.48 வாக்கில், ஜாலான் குவாலா சிலாங்கூர் – கோலாலம்பூர் சாலையின் 18-வது கிலோமீட்டரில் அந்த 23 வினாடி காணொளி பதிவுச் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அதே நாளன்று இரவு மணி பத்து வாக்கில், குவாலா சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் வந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதை ரம்லி காஸா உறுதிப்படுத்தினார்.