
ஷா ஆலாம், செப் 30 – நாட்டில் “X” தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு என்றும் தயார் நிலையில் இருப்பதாக கூறியுள்ளார் சுகாதார துணை அமைச்சர் லுகானிஸ்மான் அவாங்.
கோவிட் தொற்று, சார்ஸ், நிபா வைரஸ் போன்ற தொற்றுகளை எதிர்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு “X” தொற்றை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் “X” தொற்று குறித்த நிலவரங்களை சுகாதார அமைச்சு கண்காணித்து வருகிறது. எனவே தகவல் எதாவது இருப்பின் கண்டிப்பாக அது பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
செத்தியா அலாமில் நடைப்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட அவர் செய்தியாளர்களிடம் அவர் இத்தகவலை வெளியிட்டார்.