
கோலாலம்பூர், செப்டம்பர் 25 – X நோய் அச்சுறுத்தல் உட்பட எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு நோய் தொற்றையும் எதிர்கொள்ள சுகாதார அமைச்சு தயாராக உள்ளது.
WHO – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை உட்பட புதிதாக தோன்றும் எந்த ஒரு தொற்றையும் கண்டறிய சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்சமயம் பரவுவதாக கூறப்படும் புதிய நோய் என்னவென்று சரியாக தெரியவில்லை. அதனால் அது X நோய் என அழைக்கப்படுகிறது.
எனினும், அந்நோய் பரவலை எதிர்கொள்ளவும், எந்த சாத்தியத்தை கையாளவும் சுகாதார அமைச்சு தயாராக உள்ளதால ஜாலிஹா சொன்னார்.
கோவிட்-19 தொற்றுநோயைக் காட்டிலும், பெரிய நோய் தொற்றின் அச்சுறுத்தல் நெருங்கி வருவதாக, அதனால் உலகளாவிய நிலையில் லட்சக்கணக்கான உயிர்கள் மடியக்கூடுமென சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக, நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.