“Youtube-பை லைக் செய்து, Subscribe செய்யும்” வேலை மோசடி ; 53 ஆயிரத்து 875 ரிங்கிட்டை பறிகொடுத்த குடும்ப மாது

பஹாங், பிப் 6 -குவந்தானில், இணையம் வாயிலாக பகுதி நேர வேலை மோசடியில் சிக்கி, குடும்ப மாது ஒருவர் 53 ஆயிரத்து 875 ரிங்கிட்டை பறிகொடுத்தார்.
கடந்த மாதம் 29-ஆம் தேதி, WhatsApp வாயிலாக, அந்த 41 வயது மாது போலி வேலை வாய்ப்பு குறித்த தகவலை பெற்றதாக, பஹாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் 30 விழுக்காடு கமிஷனை பெற, அப்பெண் YouTube-பை லைக், Subscribe செய்தால் மட்டும் போதும்.
முதல் தடவை அவ்வாறு செய்யும் போது 300 ரிங்கிட் முதலீட்டுக்கு 390 ரிங்கிட் கமிஷன் ஈட்டிய அப்பெண், பின்னர் அதிக லாபத்தை ஈட்ட பத்து முதலீட்டு நடவடிக்கைகளுக்காக 53 ஆயிரத்து 875 ரிங்கிட் செலுத்தியுள்ளார்.
எனினும், சொந்த சேமிப்பு மற்றும் குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்ட அந்த தொகை மீண்டும் வராததால் அது குறித்து அவர் போலீஸ் புகார் செய்ததாக கூறபடுகிறது.