இந்தியா, செப்டம்பர் 18 – தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான Zee தமிழ், தற்போது சீசன் 4 சரிகமப இசை நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றது.
இதன் இறுதிச் சுற்று எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், 5 பேரை அச்சுற்றுக்குத் தேர்வு செய்யும் வாக்களிப்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மலேசியாவைப் பிரதிநிதித்து தனது இசை திறமையால் இன்றுவரை போட்டியில் மிளிர்ந்து வருகின்ற அருளினி ஆறுமுகமும், இறுதிச் சுற்றுக்குச் செல்ல நாமும் வாக்களிக்கும் நேரம் வந்துவிட்டது.
இம்முறை இந்தியாவைக் கடந்து வெளிநாட்டு மக்களும் வாக்களிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக, அருளினி இறுதிச் சுற்றுக்குச் செல்ல திரையில் காணும் எண்ணுக்கு (+918657865733) ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் மிஸ்ட் கோல் கொடுத்து வாக்களிக்க இயலும்.
மனம் கவர்ந்த மலேசிய போட்டியாளரான அருளினிக்கு இங்கிருந்தபடியே ஆதரவை வழங்கும் வாரீர்!