Latestமலேசியா

கடனாளிகளுக்கு உதவ 100 கோடி ரிங்கிட் வங்கிகள் ஒதுக்கின

கோலாலம்பூர், அக் 14 – தேவைப்படுவோருக்கு கடனை திருப்பி செலுத்துவதற்கு உதவும் பொருட்டு Urus எனப்படும் நிதி நிர்வாகம் மற்றும் மீட்சித் திட்டத்திற்காக வங்கிகள் துறை 100 கோடி ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வர்த்தகத் துறையும் AKPK எனப்படும் கடன் ஆலோசனை மற்றும் நிர்வாக நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் URUS எனப்படும் கடனை திரும்ப செலுத்த உதவும் திட்டத்தை பிரதமர் இஸ்மாயில் சப்ரி நேற்று அறிவித்தார். இந்த திட்டத்தை நிதி அமைச்சு வரவேற்பதாக அதன் அமைச்சர் Tengku Zafrul Aziz தெரிவித்தார்.

URUS திட்டத்திற்கு நவம்பர் 15 ஆம்தேதி முதல் ஜனவரி 31ஆம்தேதிவரை மனுச் செய்யலாம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Tengku Zafrul Aziz கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!