Latestமலேசியா

காரை மோதிய ஆம்புலன்ஸ் ; போலிஸ்  விசாரணை நடத்துகிறது

சுங்கை சிப்புட், அக்  14 – சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில், அம்புலன்ஸ் வண்டி,  புரோட்டோன் வீரா காரை மோதிச் செல்லும்  56 வினாடிகள் கொண்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கும் நிலையில், அந்த விபத்து கடந்த செப்டம்பர்  30 -ஆம் தேதி நிகழ்ந்தது என ,  சுங்கை  சிப்புட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜுனா யூசோஃப்  ( Juna Yusoff ) தெரிவித்தார்.

அந்த சம்பவம் ஜாலான் ஈப்போ -குவாலா கங்சார்  சாலையில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது, அவசர ஒலி எழுப்பாத  அந்த அம்புலன்ஸ் இரு கோவிட் நோயாளிகளை ஏற்றி சென்றது.  காரோட்டுநரான  62 வயது Law Poh Huat மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!