Latestமலேசியா

குடியுரிமை விவகாரம் மேல் முறையீடை மீட்டுக்கொள்வீர் – நஸ்ரி அஸிஸ்

கோலாலம்பூர், செப் 20 – வெளிநாடுகளில் பிறந்த மலேசிய தாய்மார்களின் பிள்ளைகளுக்கு மலேசிய குடியுரிமையை வழங்குவதை அனுமதிக்கும் உயர்நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருப்பதை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் . வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளின் தந்தையர்களுக்கு மட்டுமே மலேசிய குடியுரிமையை வழங்குவதற்கு அனுமதிக்க முடியும் என நினைப்பது பழமையான சிந்தாந்தம் அல்லத நாகரீகமற்றதாக இல்லையென தேசிய முன்னணி Padang Rengas நாடாளுமன்ற உறுப்பினர் Nazri Aziz நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் ஒரு பாவமும் அறியாத அவர்களது பிள்ளைகளை ஒதுக்கும் போக்கை கொண்ட சிந்தனையாக இது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மலேசிய பெண்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்த ஒரே காரணத்திற்காக வெளிநாடுகளில் பிறந்த அவர்களது பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது என பெண்களை தண்டிப்பது ஒரு வகையான பாகுபாடு என்று அவர் சுட்டிக்காட்டினார். 2021 ஆம் ஆண்டில் இத்தகைய சிந்தனை இருக்கக்கூடாது என நஸ்ரி வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முடிவு செய்துவிட்டால் அதற்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு செய்ய வேண்டியதில்லை என அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!