Latestமலேசியா

குறைந்தபட்ச சம்பளம் மறு ஆய்வு செய்யப்படும் -டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், அக் 14 – தேசிய குறைந்தபட்ச சம்பளம் மறுஆய்வு செய்யப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உறுதியளித்துள்ளார். ஏழ்மையை துடைத்தொழிப்பது தொடர்பான இயங்கலை வாயிலான ஆய்வரங்கில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். கூடிய பட்ச சம்பள உயர்வு தொடர்பான இனிப்பான செய்தி விரைவில் வெளியாகும் என சரவணன் கூறினார்.

இப்போதைய சவால் நிறைந்த பொருளாதார நிலைமையில் அதிக சம்பளம் பெறுவதற்கு தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிரமத்தை மனிதவள அமைச்சு புரிந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவேதான் குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது பேச்சு நடத்தி வருகிறது. மனிதவள அமைச்சர் என்ற முறையில் தொழிலாளர்களின் சமூக நலன் விவகாரங்களில் தாம் முழு கடப்பாடு மற்றும் உறுதியை கொண்டிருப்பதாக சரவணன் கூறினார். 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்த பட்ச தேசிய சம்பள மறுமதிப்பீடு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிற்சங்கங்கள் , அரசு சார்பற்ற இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய தரப்புகளின் கூட்டமைப்பான MARHEN நடத்திய ஆய்வரங்கை சரவணன் தொடக்கி வைத்தார், தொழிலாளர்களின் பிரச்சனையை செவிமடுப்பதற்கு தமது அலுவலகத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்றும் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!