Latestமலேசியா

கூடுதல்  நேரம் கடையைத்  திறந்திருந்த  Burger  வியாபாரிக்கு 50,000 ரிங்கிட் அபராதம்

கோத்தா பாரு , ஏப்ரல்  26 – கிளந்தான் கோத்தா பாரு,   கம்போங் ரம்புதான் ரெண்டாங்-கில் தனது வீட்டின் முன்,   அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி, Burger வியாபாரம் செய்ததற்காக,  வியாபாரி ஒருவருக்கு 50,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

MCO நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள கிளந்தானில் இரவு மணி 10 வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் , அபராதம் விதிக்கப்பட்ட 38 வயது  வான் மொஹமட் ஃபைசால் வான் காடீர் என்பவர் இரவு மணி 11.10 வரை தனது கடையைத் திறந்திருந்தார்.  ஆனால், அபராதம் விதிக்கப்பட்டபோது தனது கடையில் யாரும் இல்லையென அவர் தெரிவித்தார்.

இவ்வேளையில், தனக்கு விதிக்கப்பட்ட 50,000 ரிங்கிட் அபராதத் தொகையை குறைப்பதற்கு, அவர் சுகாதார அமைச்சிடம் முறையீடு செய்யலாமென  கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம்  டாவுட் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!