Latestமலேசியா

கெடா மந்திரி பெசாரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜூன் 7- MCO விதிமுறையை மீறி சனிக்கிழமையன்று சோதனை அடிப்படையில் கார் ஓட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி முகமட் நோர் இன்று மாலை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் 5 தனிப்பட்ட நபர்கள் வாக்குமூலம் தந்துள்ளதாக மத்திய செபாராங் பிறை போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமாட் தெரிவித்தார். அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூம் பதிவு செய்யப்பட்ட பின் விசாரணை அறிக்கை அரசாங்க தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என ஷாபி அப்துல் சமாட் தெரிவித்தார்.

ஜூரு ஆட்டோ சிட்டியில் போர்ட் வாகன வினியோகிப்பு நிறுவனத்திற்கு தமது இரண்டு உதவியாளர்களுடன் வந்ததோடு அங்குள்ள வாகனத்தை சோதனை அடிப்படையில் ஓட்டியதை வார இறுதியில் பெண் ஒருவர் புகைப்படம் எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை சனுசியின் உதவியாளர் ஒருவர் மறுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!