Latestமலேசியா

கொரிய நாடகங்களால் தற்கொலை அதிகரிப்பு; பாஸ் குற்றச்சாட்டை எம்.பிக்கள் சாடினர்

கோலாலம்பூர், அக் 14 – பொதுமக்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு
குறிப்பாக இளம் வயதினரின் தற்கொலைக்கு தென் கொரிய நாடகங்கள் காரணமாக இருப்பதாக பாஸ் கட்சியின் செனட்டர் முகமட் எப்பென்டி
கூறியிருந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா இயோ மற்றும் புக்கிட் மெர்தாஜாம் எம்.பி ஸ்டீவன் சிம் சாடினர் . வாழ்க்கையில் ஒருவர் தோல்வி கண்டால் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளும் அம்சத்தைத்தான் தென் கொரிய நாடகங்களும் சினிமாவும் காட்டுவதாக முகமட் எப்பென்டி நேற்று மேலவையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

முகமட் எப்பென்டியின் குற்றச்சாட்டை சிகாம்புட் எம்.பி ஹனா இயோ, புக்கிட் மெர்தாஜம் எம் .பி ஸ்டீவன் சிம் ஆகியோரும் சாடினர். பாஸ் மேலவை உறுப்பினரின் கூற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக ஹனா இயோ கூறினார். முகமட் எப்பென்டி இதுவரை கொரியாவின் எத்தனை நாடாகங்களை பார்த்துள்ளார் என ஸ்டீவன் சிம் வினவினார். இதனிடையே செனட்டர் எப்பென்டி தற்கொலைக்கு தென் கொரிய நாடகங்களை குற்றம் சாட்டுவதால் அது குறித்து புள்ளி விவரங்களையும் ஆதாரங்களையும் தெரிவிக்க வேண்டுமென நெட்டிசன்களும் பதிவிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!