Latestஉலகம்

கோவிட் எங்கிருந்து தோன்றியது ? விடைக்கான கடைசி முயற்சியாக புதிய பணிக்குழு

ஜெனிவா, அக் 14 – புதிதாக 26 நிபுணர்கள் கொண்ட பணிக்குழுவை  மீண்டும்  அமைத்திருக்கும் WHO -உலக  சுகாதார அமைப்பு , அந்த பணிக்குழு,  கோவிட்  தொற்று எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டறியும்   கடைசி வாய்ப்பாக  அமையுமென , அதன்  தலைமை இயக்குநர்  Dr. Tedros Adhanom நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சீனா, வூஹானுக்குச் சென்ற ஆராய்ச்சியாளர்களால்,  அத்தொற்று   வைளாவாலில் இருந்து பரவியதா அல்லது  ஆய்வுக் கூடத்தில்  இருந்து  கசிந்ததா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை.

இந்நிலையில், எதிர்காலத்தில் அத்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த,  அந்த வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பது அவசியமென   Dr. Tedros Adhanom வலியுறுத்தியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!