Latestமலேசியா

சூப்பர் மார்க்கெட்டுகளிலும்  சுய கோவிட் பரிசோதனை கருவிகள் விற்கப்படும்

கூச்சிங், அக்  14 – சுய கோவிட் பரிசோதனைக்கான கருவிகள், இம்மாதத்தில்,  தேர்வு செய்யப்பட்ட  supermarket கடைகளில் விற்பனை செய்யப்படுமென, உள்நாட்டு வாணிப  பயனீட்டாளர்  விவகார அமைச்சர்   டத்தோ  ஶ்ரீ நந்தா லிங்கி தெரிவித்தார்.

நாட்டில் மேலும் அதிகமான வர்த்தக தளங்களில் அந்த  கருவியை விற்பதற்கான இறுதி பேச்சுவார்த்தையில், சுகாதார அமைச்சுடன் தமது தரப்பு ஈடுபட்டுள்ளதாக   அவர் கூறினார்.

தற்போதைக்கு சுய கோவிட்  பரிசோதனை  கருவிகள், சுகாதார கிளினிக்குகளிலும் மருந்தகங்களிலும்  மட்டுமே  விற்கப்பட்டு வருகின்றன.

அக்கருவிகளின்  உச்சவரம்பு விலை 19  ரிங்கிட்  90 சென்னாகும். இதுவரை  சந்தையில் மொத்தம்  32 வகை சுய கோவிட்  பரிசோதனை கருவிகளை விற்பதற்கு சுகாதார அமைச்சு  அனுமதியளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!