Latestமலேசியா

டாக்டர் சேவியரை துரோகி என முத்திரை குத்துவது நியாயம் அல்ல -தியான் சுவா

கோலாலம்பூர், மார்ச் 14- கட்சியின் முக்கிய தொண்டராக விளங்கிவந்த டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பதவி விலகியது குறித்து தாம் மிகுந்த கவலை அடைவதாக பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். பி.கே.ஆர் கட்சிக்காக தொடக்கத்திலிருந்து சீர்திருத்த (ரிபோர்மாசி) போராட்டத்திற்கு தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட தலைவராக சேவியர் விளங்குவதாக தமது முகநூலில் தியான் சுவா பதிவிட்டுள்ளார்.
கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக கட்சியின் தலைமைத்துவ குழுவில் ஒருவராக சேவியர் இருந்து வந்தார். கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதில் அவரது தலைமைத்துவ பங்கேற்பும் இருந்தது. எனவே அவரை கண்ணை மூடிக்கொண்டு துரோகி என முத்திரை குத்துவது நியாயமில்லையென பத்து தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக தியான் சுவா வலியுறுத்தினார்.
தனது எதிர்ப்பாளர்களை பிரித்துவிட்டு அன் மூலம் பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு முயற்சி செய்கிறது. மிரட்டலும் அச்சுறுத்தல் அரசியல் போக்கும் அரசியலில் நிலைத்தன்மையற்ற சூழ்நிலையைத்தான் ஏற்படுத்தும். மாறாக அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து நாட்டை மறுநிர்மாணிப்பதற்கான கலந்துரையாடல் நடத்துவதற்கான நடவடிக்கையை முஹிடின் யாசின் முன்னெடுக்க வேண்டும் என தியான் சுவா கேட்டுக்கொண்டார்.
பெரும்பான்மையோரின் குரல் வளையை நசுக்கிவிட்டு சிறு கும்பலை மட்டும் வைத்துக்கொண்டு பெரிக்காத்தான் நேசனல் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது.என்றும தியான் சுவா நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!