Latestமலேசியா

தாயகம் திரும்பும் மலேசியர்கள் வீட்டில் தனித்திருக்க விண்ணப்பிக்கலாம்

கோலாலம்பூர், செப்  20 – வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்களும், மலேசியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களும், நாடு திரும்பும்போது , முழு தடுப்பூசி செலுத்தியவர்களாக இருந்தால், வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள  விண்ணப்பம் செய்யலாம்.

தனிமைப் படுத்திக் கொள்ள முறையான வசதியுள்ள  வீடுகளைக்  கொண்டிருப்பவர்களுக்கும், கோவிட் தொற்று கண்டிருக்காதவர்களுக்கும் மட்டுமே அந்த  அனுமதி வழங்கப்படுமென  சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின்  தெரிவித்தார்.

மலேசியா திரும்புவதற்கு முன்பு, 10 நாட்களுக்கு முன்பாகவே அந்த   விண்ணப்பம் செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!