Latestமலேசியா

தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளிக்கு  நிரந்தர கட்டிடம் தேவை;  கல்வி துணையமைச்சரிடம்  பெற்றோர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்து   

கோலாலங்காட், அக் 14  – கல்வித்துறையின்  முதலாவது  துணையமைச்சர்
டாக்டர்  மா ஹங் சுன்  தெலுக் பங்லீமா காராங்  தமிழ்ப்பள்ளியின் பழைய கட்டிடத்தை இன்று காலையில் பார்வையிட்டார். அந்த பள்ளியின்  கூரைப்பகுதி நேற்று முன் தினம் இடிந்து விழுந்ததைத் தொடந்து அப்பள்ளியின் கட்டிடத்தின் உணமை நிலையை கண்டறிவதற்காக  துணையமைச்சர்  அப்பள்ளிக்கு வருகை புரிந்தார்.   இந்த பள்ளியின் கட்டடத்தை  சீரமைக்கும்   பணிக்காக  ஒரு லட்சம் ரிங்கிட்டை  வழங்குவதற்கு  மாவட்ட  கல்வி அலுவலகம் முன்வந்துள்ளது.  தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் உடனடியாக  மேற்கொள்வதற்கு அந்த தொகை பயன்படுத்தப்படும்  என கூறப்பட்டது.

எனினும் பள்ளியின்  பழைய கட்டிடம் மிகவும் மோசமாக இருப்பதால் அதனை முழுமையாக  உடைத்துவிட்டு  மூன்று மாடி புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என துணையமைச்சரிடம் தாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதாக  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்  வெண்மணி கூறினார்.

கோலாலங்காட் வட்டாரத்தில்  மாணவர்கள் பதிவிலும், ஆசிரியர்கள் எண்ணிக்கையிலும் மிகப் பெரிய  பள்ளியாக  தெலுக் பங்லீமா  காராங் தமிழ்ப்பள்ளி விளங்குவால் இப்பள்ளியை சீரமைப்பது  தற்காலிக தீர்வாகத்தான் இருக்க முடியும் என பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின்  துணைத்தலைவர் கமலநாதன்  தெரிவித்தார்.  45 ஆண்டு காலம் பழமையவாந்த  அந்த கட்டிடத்தை  பழுதுபார்ப்பதால்  பணம்தான் விரயமாகும்.  இந்த கட்டிடம்  மிகவும் பழமையாக இருப்பதால்  மாணவர்களுக்கு பாதுகாப்பாக இல்லை என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் மாணவர் பதிவிலும் தாங்கள் பிரச்சனையை எதிர்நோக்குவதாக  கமலநாதன் தெரிவித்தார்.

துணையமைச்சர்  டாக்டர் மா ஹங் சுங்கின் வருகையின் மூலம்,  தெலுங் பங்லீமா காராங்  பள்ளியின்  பழைய கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டடம் கட்டுவதற்கான  அனுமதி கிடைக்குமென  எதிர்பார்ப்பதாக அப்பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக ,  இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர்  ராஜசேகரன் கிருஷ்ணன்,
கோலாலங்காட்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்,  ,கோலாலங்காட்  வட்டார தமிழ்ப்பள்ளிகளின் ஆலோசகர் ராஜசேகரன் மாரிமுத்து , சிலாங்கூர் மாநில பாலர் பள்ளி மற்றும் தமிழ்ப்பள்ளிகன்  உதவி இயக்குனர்  மணிசேகரன், கோலாலங்காட் தலைமையாசிரியர் மன்ற தலைவர்  கணேசன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!