Latestமலேசியா

நாளை அம்னோ பொதுப் பேரவை பெர்சத்துவின் உறவை முறித்துக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்படும்

கோலாலம்பூர், மார்ச் 27- கோவிட் தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட கடந்த ஆண்டின் அம்னோ பொதுப் பேரவை நாளை நடைபெறும். இன்று அம்னோ இளைஞர், மகளிர் பிரிவின் மாநாடு நடைபெறுகிறது. 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு அம்னோவின் அடுத்தக் கட்ட முன்னெடுப்புக்கு அம்னோ பொதுப் பேரவையில் சில முக்கியமான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியுடனான உறவையும் ஒத்துழைப்பையும் துண்டித்துக்கொள்வதற்கான தீர்மானம் அம்னோ பொதுப் பேரவையில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

ஏற்கனவே அம்னோ உச்ச மன்றத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு பெர்சத்துவின் தலைமைத்துவத்திடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அம்னோவின் 190 டிவிசன்களில் 124 டிவிசன்கள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!