Latestமலேசியா

நியமன பதவிகளுக்கான தகுதியை நிர்ணயிப்பீர் – டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர், செப் 20 – ஒருவரை அமைச்சர் நிலையிலான தகுதியைக் கொண்ட நியமன பதவிகளுக்கு நியமிக்கும் விவகாரத்தில் தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக்கொண்டார். எந்தவொரு தகுதியும் நிர்ணயிக்காத நிலையில் ஒருவர் அமைச்சர் நிலை தகுதியைக் கொண்ட நியமன பதவிக்கு நியமிக்கப்பட்டால் அது லஞ்சத்திற்கு நிகரானது என முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதீர் தெரிவித்தார். அண்மைய காலமாக அமைச்சர்நிலை தகுதியில் பலர் குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அமைச்சர் நிலை தகுதி எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதற்கு எந்தவொரு விளக்கமும் வழங்கப்படுவதில்லையென நாடாளுமன்றத்தில் பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!