Latestமலேசியா

பருவமழை தொடக்கம்; கனமழை பெய்வதோடு திடீர் வெள்ளம் ஏற்படும்

கோலாம்பூர், செப் 20 – செப்  24-ஆம் தேதி தொடங்கி  நவம்பர் மாத தொடக்கம் வரையில் நீடிக்கும் பருவமழை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுவதோடு,  மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த பருவமழை காலத்தின் போது , தீபகற்பத்தின் மேற்கு கரை மாநிலங்களிலும், உட்புறமான பகுதிகளிலும், சபாவின் மேற்கு பகுதியிலும், சரவாக்கின்  மேற்கு மத்திய பகுதிகளிலும் கனமழை பெய்யும்.

மாலை,இரவு நேரங்களில் பெய்யும் மழையினால் திடீர் வெள்ளம் ஏற்படுவதோடு, உறுதியற்ற கட்டடங்களுக்கு சேதம் ஏற்படலாமென , மலேசிய வானிலை ஆய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!