Latestமலேசியா

பாதுகாவலர் மரணத்திற்காக பெர்சத்து உறுப்பினரை மீண்டும் கைது செய்ய முடியாது; பேரா போலீஸ் தலைவர் தகவல்

ஈப்போ, செப் 3 – பாதுகாவலர் தேவசகாயம் மரணம் தொடர்பான பெர்சத்து இளைஞர் பிரிவு உறுப்பினரை போலீஸ் மீண்டும் கைது செய்ய முடியாது . ஆனால் இம்மாதம் 9ஆம் தேதி அவரது வழக்கு விசாரணை மீண்டும் மறுவாசிப்புக்கு வரும்போது அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை கொண்டுவருவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என பேரா போலீஸ் தலைவர் Mior Faridalathrash Wahid தெரிவித்தார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 7 ஆவது பிரிவு (2) இன் கீழ் ஒரு குற்றத்திற்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது தண்டிக்கப்பட்டாலோ அதே குற்றத்திற்காக அவரை மீண்டும் குற்றஞ்சாட்ட முடியாது. குற்றச்சாட்டு மற்றும் தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டால் உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட முடியும் என Mior Faridalathrash wahid கூறினார்.

தேவசகாயம் கடந்த வாரம் ஈப்போவிலுள்ள தமது வீட்டில் இறந்ததைத் தொடர்ந்து அதனை கொலையாக போலீசார் வகைப்படுத்தினர். அரசு தரப்பு வழக்கறிஞரின் அடுத்த உத்தரவுக்காக போலீசார் தற்போது காத்திருப்பதாக Mior Faridalathrash wahid தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!