Latestமலேசியா

பேராவில் இன்னமும் 300 ஆசிரியர்கள் தடுப்பூசி போடவில்லை

ஈப்போ, அக் 14 – பேராவில் இன்னமும் சமார் 300 ஆசிரியர்கள் கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசி போடாமல் இருக்கின்றனர் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ahmad Saidi Mohamad Daud கூறினார். அந்த ஆசிரியர்கள் MySejahtera மூலமாக தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தும் தேதிக்கு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்களில் சிலர் தடுப்பூசி போடுவதற்கு இன்னமும் பதிவு செய்யாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் ஆசிரியர்களிடம் விவரங்களை பெறுவதற்காக அவர்களுடன் தொடர்புகொள்ளும் முயற்சியில் மாநில கல்வித்துறை ஈடுபட்டு வருவதாகவும் Ahamad Saidi தெரிவித்தார். பேராவில் உள்ள பள்ளிகளில் 37,590 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே பேராவிலுள்ள 184,956 மாணவர்களில் 168,897 பேர் முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!