Latestமலேசியா

போதைப் பொருள் வினியோகிக்கும் கும்பல் முறியடிப்பு ; எழுவர் கைது

செர்டாங், செப் 21 – போதைப் பொருள் வினியோகிக்கும் கும்பல் என நம்பப்படும் ஐந்து ஆடவர்கள் மற்றும் இரு பெண்களை கைது செய்த போலீசார் கொக்கெய்ன் போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 174 மூட்டைகளைக் கொண்ட ரசாயன தூளையும் பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த மதிப்பு 5 கோடி ரிங்கிட்டாகும் . இம்மாதம் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட ஏழு சோதனை நடவடிக்கையில் 27 முதல் 57 வயதுக்குட்பட்ட அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் razarudin Husain தெரிவித்தார்.

ஒரு கடை வீட்டில் 174 மூட்டைகளில் இருந்த 5.5 டன் எடை கொண்ட ஒரு வகை ரசாயன தூள் ஷாபு மற்றும் மற்றொரு போதைப் பொருள் தயாரிக்கப்படுவதற்கு சேர்க்கப்படும் கலவையென அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் உள்நாட்டு சந்தைக்கு மட்டுமின்றி Qatar, Hongkong ஆகிய நாடுகளுக்கும் அனுப்பப்படவிருந்தவை என்றும் Razarudin Husain தெரிவித்தார்.

அந்தக் கும்பலிடமிருந்து மூன்று வாகனங்கள், கைக் கடிகாரம் , ரொக்கத் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இவற்றின் மொத்த மதிப்பு
12 லட்சத்து 20,000 ரிங்கிட் என்றும் அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!