Latestமலேசியா

போலீஸ் மாநிலம் கடப்பவர்களின் மைசெஜாத்ரா தடுப்பூசி சான்றிதழை பரிசோதிக்கும்

கோலாலம்பூர், அக் 14 – போலி கோவிட் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்தி மாநிலம் கடக்கும் சம்பவங்கள்  நிகழாமல் இருக்க, போலீஸ்  மைசெஜாத்ரா செயலில் உள்ள இலக்கவியல்  தடுப்பூசி சான்றிதழை நன்கு பரிசோதனை செய்யும்.

அவ்விவகாரத்தில் தவறிழைப்பவர்கள் மீது ,  உடனடி  அபராதம் விதிக்கப்படுமென, புக்கிட் அமான்  உள்நாட்டு – பொது பாதுகாப்பு துறையைச் சேர்ந்த  SAC M V Srikumar Nair  தெரிவித்தார்.

R & R நெடுஞ்சாலை  ஓய்வெடுக்கும் பகுதிகள் உட்பட  மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுவரை மேற்கொண்ட சோதனையில், நாடு முழுவதும்  கோவிட் தொற்று தொடர்பான  SOP – களை மக்கள் முறையுடன் கடைப்பிடித்து வருவது தெரிய வந்துள்ளது.  சிலர் மட்டுமே அந்த விதிமுறைகளைப் பின்பற்றாத நிலையில், போலீஸ்  SOP மீதான கண்காணிப்பு நடவடிக்கைகள்  அதிகரிக்குமென,  ஶ்ரீகுமார்  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!