Latestமலேசியா

முதுகில் குத்தியவர்களுடன் புரிந்துணர்வு உடன்பாடா? பக்காத்தான் ஹராப்பானை சாடினார் ஷாபி அப்டால்

கோலாலம்பூர், செப் 15 – ஆட்சியை கவிழ்ப்பதற்கு முதுகில் குத்திய கூட்டரசு அரசாங்கத்தை சேர்ந்தவர்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்துகொண்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை Semporna நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரும் சபா வாரிசான் கட்சியின் தலைவருமான Mohd Shafie Apdal சாடினார். பக்காத்தான் ஹராப்பான் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்.

அந்த வெற்றியின் மூலம் அமைக்கப்பட்ட கூட்டரசு அரசாங்கத்தை கடந்த ஆண்டு Sheraton ஹோட்டலில் கூட்டம் நடத்தி பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கவிழ்த்த தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு இப்போது பக்காத்தான் ஹராப்பான் முன்வந்திருப்பது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார். நமது வெற்றியை அவர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது எந்த அடிப்படையில் அவர்களுடன் கைகோர்த்துக்கொண்டு புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம் என அவர் வினவினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!