Latestஉலகம்

யாழ்ப்பானத்திலுள்ள ஆலயங்களுக்குள் காலணியுடன் நுழைந்த போலீஸ் அதிகாரி ; மக்கள் அதிர்ச்சி

கொழும்பு, அக் 14 – இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பானத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் நுழைந்த சம்பவம் தமிழர்களுக்கிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இலங்கை போலீஸ் படைத் தலைவர் உடபட உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை மேற்கொண்டபோது அந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகாரிகளில் ஒருவர் காலணியுடன் ஆலயத்திற்குள் சென்ற புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதை தொடர்ந்து அதிகமான தமிழ் மக்கள் தங்களது அதிருப்தியையும் எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே இந்த தகவலை போலீஸ ஊடகப் பேச்சாளர் மறுத்துள்ளதாகவும் பி.பி.சி தகவல் வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!