Latest
வெளிநாட்டு பரிமாற்ற விவகாரம்: ‘Due Diligence’ விதிகளை 45 நாட்களில் வெளியிட RHB வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு

புத்ராஜெயா, டிசம்பர்-13, புத்ராஜெயா மேல் முறையீட்டு நீதிமன்றம், RHB வங்கியை 45 நாட்களுக்குள் தனது ‘Minimum Due Diligence’ விதிகளை வெளியிட உத்தரவிட்டுள்ளது.
Maritime Network Sdn Bhd தாக்கல் செய்த வழக்கில், வெளிநாட்டு நாணய பரிமாற்றங்கள் காரணமின்றி திருப்பி அனுப்பப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியது.
முன்னதாக, உயர் நீதிமன்றம் இந்த கோரிக்கையை நிராகரித்து Maritime Network நிறுவனத்திற்கு RM10,000 செலவுத் தொகையை விதித்தது.
எனினும், மேல் முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றி, RHB வங்கியின் உள் விதிகளை வெளிப்படுத்த வேண்டும் என தற்போது உத்தரவிட்டுள்ளது.
இம்முக்கியத் தீர்ப்பானது, வங்கிகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களின் உரிமைகள் குறித்த முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.



