
செப்பாங், டிசம்பர்-13, KLIA-வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய குடிநுழைவு பரிசோதனை முறை, மலேசியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பயணிகள் தற்போது 10 வினாடிகளுக்குள் குடிநுழைவு சோதனையை முடிக்க முடிகிறது.
வியட்நாமின் ஹனோயிலிருந்து திரும்பிய தரவு ஆய்வாளர் Jamil Shahrin, இப்புதிய முறையின் வேகத்தை பாராட்டினார்.
முன்பெல்லாம் ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாக அவர் கூறினார்.
புதிய முறையில், பயணிகள் autogate வழியாக சென்று, முக scan செய்து, QR குறியீட்டை scan செய்தால் போதும்.
இதனால் கடப்பிதழ் மற்றும் கைவிரல் ரேகை சோதனைகள் தேவையில்லை.
QR குறியீடுகள் மூலம் பயணிகளின் தகவல்கள் விமான நிலைய தரவுத் தளத்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகின்றன.
இதனால் கூட்ட நெரிசல் குறைந்து, பயண அனுபவம் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் மாறியுள்ளதாக மலேசியர்கள் பாராட்டுகின்றனர்.



