மலேசியா
பாசீர் கூடாங்கில் 300 மீட்டர் நீளத்துக்கு சாலையில் 3,000 லிட்டர் இரசாயனக் கசிவு; ஆபத்து இல்லை என தகவல்

பாசீர் கூடாங், டிசம்பர்-13 ஜோகூர், பாசீர் கூடாங், தஞ்சோங் லங்சாட் தொழிற்பேட்டையில் நேற்று காலை சுமார் 3,000 லிட்டர் இரசாயனப் பொருள் கசிவு ஏற்பட்டது.
Jalan Terumtum -வில் 300 மீட்டர் தொலைவு வரை அது சாலையில் சிந்தியது.
தீயணைப்பு – மீட்புத் துறையும் அபாயகர இராசயண பொருள் கண்டறிதல் குழுவான HAZMAT-டும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட காற்றுத் தர பரிசோதனையில் எந்தவித ஆபத்தான அளவீடும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் காயங்களும் பதிவாகவில்லை.
பாதிக்கப்பட்ட சாலை தற்காலிகமாக மூடப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



