
பாலிங், டிசம்பர் 13 – பாலிங் Parit Panjang-Kuala Ketil சாலையில் அமைதிருக்கும் Kampung Tembak அருகே மோட்டார் சைக்கிளும் ட்ரெலர் லாரியும் மோதி விபதுக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
17 மற்றும் 19 வயதுடைய அந்த இளைஞர்கள் கூலிமிலிருந்து சிக் மாவட்டத்திலிருக்கும் Kampung Batu Besar நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதென்று பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Brandon Anak Richard தெரிவித்தார் .
அவரது தகவலின்படி, 17 வயதுடைய இளைஞர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் வளைவில் செல்லும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் சென்று கொண்டிருந்த டிரெய்லரில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்த பயணியும் கடுமையாக காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு இளைஞர்களின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக பாலிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் இவ்வழக்கை சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பதிவுச் செய்துள்ளனர்.



