Latest

கோலாலம்பூர் கட்டுமானத் தளத்தில் சாரக்கட்டு சரிந்ததில் வங்காளதேச தொழிலாளி படுகாயம்

கோலாலம்பூர், அக்டோபர்-2 – தலைநகர் Lee Rubber கட்டடத்தின் பின்புறமுள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் சுவர் இடிந்து விழுந்ததில், வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் கடுமையாகக் காயமடைந்தார்.

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் அவ்வாடவரின் வலது கை – கால் முறிந்தது.

Scaffolding எனப்படும் சாரக்கட்டு சரிந்த போது இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவரை, தீயணைப்பு-மீட்புப் படை வருவதற்கு முன்பாகவே அங்கிருந்த பொது மக்கள் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

சம்பவ இடத்தில் வேறு யாரும் சிக்கிக் கொண்டிருக்கின்றார்களா என்பதை கண்டறிய, அதிகாரிகள் முழு சோதனை நடத்தினர்; பின்னர் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்கு தடுப்புப் போடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!