
புது டெல்லி, அக்டோபர்-23 – கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்க மாட்டார்.
மாறாக மெய்நிகர் வாயிலாக அதில் அவர் கலந்துகொள்வார் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
இந்த தீபாவளி கொண்டாட்ட காலத்தில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க வேண்டியிருப்பதும் அம்முடிவுக்குக் காரணமாகும் என்றார் அவர்.
இந்நிலையில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆசியான் மாநாட்டில் இந்தியா சார்பில் நேரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி நேரில் பங்கேற்கவில்லை என்றாலும், இராஜதந்திரியான ஜெய்சங்கரின் வருகை இந்தியா-ஆசியான் உறவுகளுக்கு அதன் தொடர்ந்த அர்ப்பணிப்பை இது வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பதிலாக அந்நாட்டு துணைப் பிரதமர் கோலாலம்பூர் வருகிறார்; சீனா சார்பில் அதன் பிரதமர் வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பின் வருகை உறுதியாகியுள்ளது.