
புத்ரா ஜெயா, செப் -24,
ஆடம்பர கார்களுக்கான ரி.ம 35.7 மில்லியன் ரிங்கிட் சாலை வரி செலுத்தாமல் இருப்பவர்களில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றம் டான்ஸ்ரீ விருதுபெற்ற
தனிப்பட்டவர்களும் அடங்குவர் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். சாலை போக்குவரத்துத் துறையின் தரவுகளின்படி ஐந்து வகை ஆடம்பர கார்களுக்கு சாலை வரி செலுத்தப்படாமல இருக்கும் தொகை இதுவாகும். 4,308 porsche கார்களுக்கான 13.7 மில்லியன் ரிங்கிட், 675 Ferari கார்களுக்கான
4.7 மில்லியன் ரிங்கிட், 660 Bentley கார்களுக்கான 7 மில்லியன் ரிங்கிட், 372 Lamborghini கார்களுக்கான 37 லட்சம் ரிங்கிட் மற்றும் 345 Rolls-Royce கார்களுக்கான 6.4 மில்லியன் ரிங்கிட் தொகைகளை உட்படுத்திய சாலை வரி இன்னும் செலுத்தப்படாமல் உள்ளன.
சம்பந்தப்பட்ட அனைத்து கார் உரிமையாளர்கள் , அவர்களது கார் வகைகள், மற்றும் காலாவதியான சாலை வரி போன்ற தரவுகள் போன்ற விவரங்கள் சாலை போக்குவரத்து துறையின் முறையில்
இருப்பதோடு அவர்களில் பிரபலமான அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களும் அடங்கியபோதிலும் எவரது பெயரையும் கெடுக்க விரும்பவில்லை என்பதால் அவர்களது பெயர் அறிவிக்கப்படாது என அந்தோனி லோக் கூறினார். சாலை வரியை கட்டவேண்டும் என்ற பொறுப்புணர்வை அவர்கள் கொண்டிருக்க வேண்டும். அவர்களது கார்கள் சாலையில் இன்னமும் ஓடுவதால் காப்புறுதி செலுத்தி சாலை வரி அல்லது Rotax எடுக்க வேண்டும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அந்தோனி லோக் கேட்டுக்கொண்டார். அதோடு சாலை வரி மற்றும் காப்புறுதி இல்லாமல் இருக்கும் ஆடம்பர கார்களை பறிமுதல் செய்வதற்காக OPS Luxury நடவடிக்கையை சாலை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.