
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-12 – பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் பூட்டிய அடுக்குமாடி வீட்டிலிருந்து 83 வயது மூதாட்டி பலவீனமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டுக் கழிவறையில் விழுந்ததாகக் கூறப்படும் அம்மூதாட்டி நேற்று வெளியில் வரவில்லை; இதனால் அவரின் பாதுகாப்புக் குறித்து கவலையுற்ற அடுக்குமாடி நிர்வாகம் தீயணைப்பு- மீட்புப் படைக்குத் தகவல் தெரிவித்தது.
சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழு, சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றது.
அங்கு அம்மூதாட்டி பலவீனமான நிலையில் காணப்பட்டார்; அவரை மீட்டு மருத்துவக் குழுவிடம் தீயணைப்புப் படையினர் ஒப்படைத்தனர்.