Latestமலேசியா

காஜாங்கில் போதைப்பொருள் மையமாக மாறிய அடுக்குமாடி வீடு: RM10.4 மில்லியன் போதைப்பொருட்கள் பறிமுதல்

ஷா ஆலம், டிசம்பர் 15 – காஜாங்கில் அடுக்குமாடி வீடொன்றை, போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் மையமாக பயன்படுத்தி வந்த கும்பலை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடத்திய சோதனையில் 10.4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் 40 முதல் 45 வயதுடைய இரண்டு உள்ளூர் பெண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு ஆண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar கூறினார்.

மேலும் 75 கிலோவுக்கும் அதிகமான ecstasy, ketamin, syabu, eramin மற்றும் yaba போதை மாத்திரைளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே நேரத்தில் 2 கிலோ கிராம் பெறுமானமுள்ள 1,600 காஞ்சா சிகரெட்டுகள் மற்றும் 195.5 லிட்டர் ecstasy திரவ பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன.

இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக செயல்பட்டு வந்ததாகவும், கைதான இரண்டு பெண்களுக்கும் மாதம் 5,000 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், Honda City கார் ஒன்றும், 52,600 ரிங்கிட் மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!