
ஷா அலாம், அக் 9 –
கோலா சிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா, கம்போங் சுங்கை டாராவில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறம் விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிய போலீஸ்காரர் கடுமையாக காயம் அடைந்தார்.
நேற்று பின்னேரம் நடந்த அந்த விபத்தில் பெஸ்தாரி ஜெயா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சர்ஜண்ட் தலையில் காயம் அடைந்தார்.
தனது மகனை பள்ளியிலிருந்து ஏற்றிவருவதற்கு சென்று கொண்டிருந்தபோது அந்த போலீஸ் அதிகாரி விபத்துக்குள்ளானதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent அஷாருடின் தாஜூடின் ( Azaharudin Tajudin) தெரிவித்தார்.
பெஸ்தாரி ஜெயா போலீஸ் நிலையத்திலிருந்து Rantau Panjangகிலுள்ள சமய தொடக்கப் பள்ளியை நோக்கி தனது யமஹா NVX மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எதிர்திசையிலிருந்து வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் அந்த போலீஸ் அதிகாரி உரசியதாக நம்பப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவர் சாலையின் இடதுபுறம் கீழே விழுந்ததால் சிகிச்சைக்காக Tanjong Karang மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்



