
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15,
இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும் உடலில் கடுமையாக காயம் அடைந்த அந்த ஆடவர் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அதிகாலை மணி 1.45 அளவில் இறந்தார்.
Jalan Air Hitam மிலிருந்து Jalan Rumbiah வை நோக்கி 26 வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற கார்
ஜாலான் மஜ்திட் நெகிரி அருகே சென்றதும், ஓட்டுநர் ஒரு தடையைத் தவிர்க்க முயன்று, ஜாலான் Tembaga வில் வெளியேறிய மோட்டார் சைக்கிள் மீது மோதியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக வடகிழக்கு போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அப்துல் ரொசாக் முகமட்
( Abdul Rozak Muhammad ) தெரிவித்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் காயமின்றி உயிர் பிழைத்தார் என அப்துல் ரொசாக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்



