
கோலாலம்பூர், செப் 4- குடும்ப வன்முறை உள்ளிட்ட துன்புறுத்தல் சம்பவங்களுக்கு ஆண்களும் பலியாகும் அபாயத்தில் உள்ளனர் என்பதை மகளிர் ,குடும்ப சமூக மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் Datuk Seri Dr Noraini Ahmad ஒப்புக்கொண்டார்.
இது குறித்து குறைவான புகார்களே பதிவாகியிருந்த போதிலும் இந்த விவகாரத்தில் அமைச்சு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
வன்முறை தொடர்பான வழக்குகளைப் பொறுத்தவரை, இது பெண்களை மையமாகக் கொண்டது மட்டுமல்லாமல், ஆண்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கொண்ட புகார்களையும் உள்ளடக்கிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1994 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் சமூக நல அமைச்சு விசாரணைகளை நடத்தி வருகிறது. மகளிர் , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் கீழ் 2019 ஆம் ஆண்டு குடும்ப வன்முறைக்கு எதிரான குழு அமைக்கப்பட்டது.
இது குடும்ப வன்முறை விவகாரங்கள் தொடர்பான முயற்சிகளைக் கண்காணித்து ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என நொராய்னி தெரிவித்தார்.