
கோலாலம்பூர், நவம்பர் 20 – கொடுமைக்கார கணவனின் அடி, உதை, அவமானம் மற்றும் மன ரீதியான தொந்தரவுகளைக் கடந்த 40 ஆண்டுகளாக தாங்கி கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க பெண் தற்போது அவரை விவாகரத்து செய்துள்ளார்.
கணவர் வீட்டிற்கு வெளியே நல்லவரைப் போல நடந்து கொண்டதால், தாம் உள்ளுக்குள் பயத்துடன் வாழ்ந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தாதாக அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
நீண்டகால மன அழுத்தத்தால், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த அவர், இந்த உண்மை நிலையைக் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்ட பின் விவாகரத்து பெற்னறுள்ளார்.
தற்போது அம்மாது மதபயிற்சி மையத்தில் அமைதியான வாழ்க்கை நடத்தி வருவதோடு நீண்ட கால வேதனையிலிருந்து விடுபட்டிருக்கின்றார்.



