
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-18- பெட்டாலிங் ஜெயா SS2 பகுதியில் போலீஸாரின் சாலைத் தடுப்புச் சோதனையின் போது தாம் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாக, தைவானிய பெண் கூறியுள்ள புகார் விசாரிக்கப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Sharul Nizam Jaafar) அதனை உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற புகார்களைத் தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய ஷாருல் நிசாம், தவறான நடத்தை என வரும் போது, உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றார்.
பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டினர் தானே என்ற பாகுபாடு காட்டி புகார்களை புறந்தள்ள மாட்டோம்;
போலீஸ் படையின் நற்பெயரைக் கட்டிக் காக்கும் வகையில் நியாயமாக நடந்துகொள்வோம் என ஷாருல் நிசாம் சொன்னார்.
போலீஸ்காரர்கள் தம்மிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்பெண் கூறியப் புகார் முன்னதாக வைரலானது.