சிங்கப்பூரில் 2,000-க்கும் மேற்பட்ட வேப் பொருட்களுடன் பிடிபட்ட இரண்டு மலேசியர்கள்

சிங்கப்பூர் நவம்பர் 18 – கடந்த சனிக்கிழமை, 2,000-க்கும் அதிகமான வேப் பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற இரண்டு மலேசியர்கள் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
முதல் சோதனையில் பிடிபட்ட ஆடவர் 1070 வேப் பொருட்களும், இரண்டாவது சோதனையில் நிறுத்தப்பட்ட ஆடவர் 1,000 வேப் பொருட்களையும் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
e-vaporisers அல்லது அதனுடன் தொடர்புடைய சாதனங்களை இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, விற்பது அல்லது விற்பனைக்கு முன்வைப்பது ஆகியவை சட்டவிரோதமான செயல் என்று சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது..
இக்குற்றம் முதல் தடவையாக இருப்பதால் அதிகபட்சம் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிப்படும். அதுவே அக்குற்றம் இரண்டாவது முறையாக இருந்தால் 20,000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் 12 மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.



