
ஈப்போ, ஆக 28 – 26 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்களை பேராக் போலீஸ் அழித்துள்ளனர்.
இவை 2012 மற்றும் 2024 க்கு இடையில் தீர்வு காணப்பட்ட 5,400 க்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் துணைக் கமிஷனர் முகமட் அஸ்லின் சடாரி ( Mohammad Azlin Sadari ) தெரிவித்தார்.
404kg ஷாபு , 165kg கஞ்சா, 46kg Ketamin , 652kg ketum இலைகள் மற்றும் 3 மில்லியன் மில்லிலிட்டர்களுக்கும் அதிகமான ketum பானம் ஆகியவையும் அழிக்கப்பட்டவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் இருந்து சாட்சிப் பொருளாக பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகளை உன்னிப்பாக கண்காணித்து வெற்றிகரமாக வழக்குகள் முடிக்கப்பட்ட பின் அவை அழிக்கப்பட்டதாக Mohammad Azlin Sadari தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம்தேதிவரை பேராக்கில் போதைப்பொருள் குற்றங்களுக்காக மொத்தம் 13,997 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 1,918 பேர் போதைப்பொருள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 11 விழுக்காடு அதிகமாகும்.
மொத்தம் 351 நபர்கள் மீது கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் பிரிவு 39B யின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது.