
கோலாலம்பூர், செப்டம்பர் 10 – செலாயாங் பண்டார் உத்தாரா பகுதியில், சமூக ஊடகங்களில் வைரலான புகாரைத் தொடர்ந்து சட்டவிரோதமாகவும், அசுத்தமாகவும் செயல்பட்டு வந்த வளாகத்திலிருந்து 110 கோழிகளும் வாத்துகளும் கோலாலம்பூர் ஊராட்சி மன்றத்தால் (DBKL) பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வளாகத்தில் உயிருள்ள கோழிகளை வைத்திருப்பது, சட்டவிரோத கூண்டுகள் அமைத்திருப்பது, மேலும் கோழி இரத்தத்தை பொது வடிகால்களில் வெளியேற்றுவது போன்ற பல்வேறு குற்றங்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, வளாக உரிமையாளருக்கு சம்மன் விதிக்கப்பட்டதுடன், வளாகத்தை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.
மேலும் கழிவுகள் மற்றும் சட்டவிரோத கூண்டுகளை அகற்றும் பணிக்கான அறிவிப்பும் வழங்கப்பட்டது.
இதற்கிடையில், பொதுச் சுகாதாரம், நகர தூய்மை மற்றும் மக்கள் நலனை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடருவதாக DBKL தெரிவித்துள்ளது.