Latestஉலகம்

ஜப்பானில் அவசரமாக தரையிறங்கிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்; இரண்டு பேர் காயம்

டோக்கியோ, செப்டம்பர் 13 – டோக்கியோவிலிருந்து பிலிப்பைன்ஸ் செபூவுக்கு (Cebu) புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், சரக்கு பிரிவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தினால் ஜப்பானில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

சிறிய காயங்களுக்கு உள்ளான இரண்டு பயணிகள் தற்போது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் 135 பயணிகளும் 7 பணியாளர்களும் பயணம் செய்தனர் என்றும் சம்பவத்தையடுத்து விமானம் ஓசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது என்றும் அறியப்படுகின்றது.

விமானத்தில் இருந்த அனைவரும் அவசர வழிகளை (emergency slides) பயன்படுத்தி உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு சோதனையில், விமானத்தில் தீ பற்றிய எந்தக் குறியீடும் இல்லையென நிறுவனம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!